தாஜ்மகாலுக்கு சவால் விடும் தமிழ்நாடு- சுற்றுலா பயணிகளின் சொர்க்கபூமி -குறைந்த செலவில் நிறைந்த இடங்கள்.

தாஜ்மகாலுக்கு சவால் விடும் தமிழ்நாடு- சுற்றுலா பயணிகளின் சொர்க்கபூமி -குறைந்த செலவில் நிறைந்த இடங்கள்.

சுற்றுலா செல்வது என்பது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது .அந்த காலத்தில் கோவில் தளங்களுக்கு மட்டும்தான்   மக்கள் குடும்பத்தோடு சென்று வருவார்கள் .ஆனால் இன்று  விடுமுறை நாட்களில் நடுத்தரமக்கள் உள்நாடுகளிலும் ,வசதியானவர்கள் வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வருகிறார்கள். 

tamilandu-tourism statistics

சமீபத்தில்  எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி இந்தியாவுக்கு வரும் நான்கு சுற்றுலா பயணிகளில் ஒருவர் தமிழ்நாட்டுக்கு வருகிறாராம் .உலக சுற்றுலா துறை கொடுத்த தகவல்படி 2018 ம் ஆண்டு இந்தியாவுக்கு 2 பில்லியன் டூரிஸ்டுகள் வந்தனராம் .அதிலும் குறிப்பாக சிக்கனமாக சுற்றுலா வருவதற்கு தமிழ்நாடு ஏற்ற இடமாம். தமிழ்நாட்டுக்கு சற்று கூடுதலாக ஆக்ரா தாஜ்மஹாலும், வாரணாசியும் உள்ளதாம் .
கடந்த ஆண்டில் தமிழகத்துக்கு 39.2 கோடிபேர் வந்து முதலிடத்திலும் இதற்கு அடுத்தது, உ.பி .க்கு 28.8 கோடி பேரும், கர்நாடகா வுக்கு 21.5 கோடி பேரும், ஆந்திராவுக்கு 19.5கோடியும், மஹாராஷ்டிராவுக்கு 12.4 கோடிபேரும் விஜயம் செய்துள்ளனராம்.
சர்வதேச சுற்றுலா பயணிகள் விஜயத்திலும் தமிழ்நாடு 60.7 லட்சம் பேரை வரவைத்து முதலிடத்தில் உள்ளது .மகாராஷ்டிரா 50 லட்சம், உ.பி.37.8லட்சம், டெல்லி 27.4 லட்சம் ,ராஜஸ்தான்க்கு  17.5 பேரும் வந்துள்ளார்களாம் .
சுற்றுலா மூலம் இந்தியாவுக்கு 2018ல் 185 கோடிபேர்கள்  வந்துள்ளார்களாம் இது 2017 ம் ஆண்டை விட 12%அதிகம். சர்வதேச சுற்றுலா பயணிகள் 2.89 கோடி பேர் இந்தியாவுக்கு வந்துள்ளார்கள். உலகில் இந்தியா சிக்கன சுற்றுலாவில் 140 நாடுகளில் 34வது இடத்தில் உள்ளது .247 பில்லியன் ரூபாய் இதன் மூலமாக வருமானம் வந்துள்ளது. 4.3 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது .