தாங்கள் வைத்தது தான் சட்டம் என வீர வசனம் பேசியவர்களெல்லாம் ஒரு கிருமிக்கு பயந்து ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் – ராஜ்கிரண்

 

தாங்கள் வைத்தது தான் சட்டம் என வீர வசனம் பேசியவர்களெல்லாம் ஒரு கிருமிக்கு பயந்து ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் – ராஜ்கிரண்

உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. குறிப்பாக ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் சுமார் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படி சிகிச்சை பெற்றவர்கள் பூரண நலம் பெற்று வீடுகளுக்கும் திரும்பி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாது தவிர்த்து வருகின்றனர். 

Rajikiran

இதுகுறித்து நடிகரும் இயக்குநருமான ராஜ்கிரண் அவரது பேஸ்புக் பக்கத்தில், “ உலகின் வல்லரசு நாடுகளும், மிகப்பெரிய ராஜதந்திரிகளும், இந்த உலகையே
தங்கள் கட்டுப்பாட்டில் தான் வைத்திருப்பதாகவும், தாங்கள் வைத்தது தான் சட்டம் எனவும், வீர வசனம் பேசியவர்களெல்லாம். இன்று ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள், ஒரு கிருமிக்கு பயந்து…

எந்த  விஞ்ஞானிகளாலும், அறிவியல் மேதைகளாலும், ராஜ தந்திரிகளாலும், சாமியார்களாலும், மதகுருமார்களாலும், கிருமியை எதிர்த்து உறும முடியவில்லை.

எந்த நேரத்தில், என்ன நடக்குமென்று தெரியவில்லை… அந்த ரகசியத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன், இறைவன் ஒருவனே…

அவனுக்கு ஆத்மார்த்தமாக பயந்து, யார் மீதும் வெறுப்பு கொள்ளாமல், எவ்வித பாரபட்சமும் காட்டாமல், அவன் படைத்த எல்லா உயிர்கள் மீதும்
அன்பு செலுத்தி,  நம் உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டால்,

நம் ஆத்மா பிரகாசிக்கும். அந்த பிரகாசத்தில் எல்லாக்கிருமிகளும் அழிந்து போகும்… நல்லதே நடக்கும், இறை அருளால்.” என பதிவிட்டுள்ளார்.