தவிர்க்க முடியாத காரணமாம்…….. 2019ல் 3 ஆயிரம் ரயில் சேவைகளை ரத்து செய்த இந்தியன் ரயில்வே…..

 

தவிர்க்க முடியாத காரணமாம்…….. 2019ல் 3 ஆயிரம் ரயில் சேவைகளை ரத்து செய்த இந்தியன் ரயில்வே…..

2019ல் 3 ஆயிரம் ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளதாக இந்தியன் ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 2014ம் ஆண்டு முதல் இதுவரையிலான காலத்தில் சென்ற ஆண்டில்தான் அதிக ரயில் சேவைகளை இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளது.

நடுத்தர வர்த்தகத்தினர் குறைந்த செலவில் நீண்ட தூர பயணம் செய்ய கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான் ரயில் போக்குவரத்து. தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒரு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டாலும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர். இந்தியன் ரயில்வேயும் இதனை கருத்தில் கொண்டு ரயில்களை சிறப்பாக இயக்கி வருகிறது.

இந்தியன் ரயில்வே

இருப்பினும், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில சமயங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந் சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், 2019ல் எவ்வளவு முறை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என இந்தியன் ரயில்வேக்கு கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு, 2019ல் பராமரிப்பு பணிகள் காரணமாக 3,146 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே பதில் அளித்துள்ளது.

ரயில் நிலையம்

ஆண்டு    ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள்
2014             101
2017             829
2018           2,867
2019           3,146