தவறுதலாக பி.ஜே.பி.க்கு வாக்களித்ததால் விரலை வெட்டி எறிந்த ரோஷக்கார மனுஷன்…

 

தவறுதலாக பி.ஜே.பி.க்கு வாக்களித்ததால் விரலை வெட்டி எறிந்த ரோஷக்கார மனுஷன்…

ஒரு ரோசக்கார இளைஞனின் செயலால் மோடி உட்பட ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் ஆடிப்போயுள்ளது.

புலந்த்ஷெஹர்:  ஒரு ரோசக்கார இளைஞனின் செயலால் மோடி உட்பட ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் ஆடிப்போயுள்ளது. சற்று கவனக் குறைவால் பா.ஜ.க.பட்டனை அழுத்தி வாக்குப் போட்ட இளைஞர் ஒருவர் தான் செய்த தவறுக்காக தனது அந்த விரலையே வெட்டி வீசியுள்ளார்.

vote

மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.உ.பி.யில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. புலந்த்ஷெஹரில் இக்கூட்டணி சார்பில் யோகேஷ் சர்மா என்ற வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

bjp

புலந்த்ஷெஹரின் சாந்திபூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அப்துலாபூர் ஹுலஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் குமார். 25 வயதான இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பகுஜன் சமாஜ் சார்பில் யோகேஷ் சர்மாவுக்கு வாக்களிக்க விரும்பினார் பவன்குமார்.

pavan kumar

தனது கிராமத்திலேயே அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குத் தனது சகோதரருடன் சென்றவர், ஏதோ ஒரு யோசனையில் தவறுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக வேட்பாளர் போலா சிங்குக்கு வாக்களித்துவிட்டார். 

pavan

வாக்குச் சாவடியை விட்டு வெளியே வந்தவர் எவ்வளவு பெரிய பாவகாரியத்தைச் செய்துவிட்டோம் என்று  மனமுடைந்தார் பவன்குமார். அவரால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் தவறுதலாக பட்டனை அழுத்திய விரலுக்கு தண்டனை தந்தால்தான் தன்னால் நிம்மதியாக இருக்கமுடியும் என்று முடிவெடுத்த அவர் அந்த விரலை வெட்டி வீசினார்.

 

அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பவன்குமார், தான் செய்த தவறையும் அதற்காகத் தேடிக்கொண்ட பிராயச்சித்தத்தையும் வீடியோவாக வெளியிட அது வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்க: பாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி: உறைய வைக்கும் சம்பவம்!