தவறுதலாக தாய்க்கு செலுத்தப்பட்ட ஹெச்ஐவி ரத்தம் – குழந்தை தப்பியது

 

தவறுதலாக தாய்க்கு செலுத்தப்பட்ட ஹெச்ஐவி ரத்தம் – குழந்தை தப்பியது

தவறாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்ஐவி பாதிப்பு இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தவறாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு ஹெச்ஐவி பாதிப்பு இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ரத்தம் தேவைப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தவறுதலாக ஹெச்ஐவி பாதிப்பு உள்ள நபரின் ரத்தம் ஏற்றப்பட்டது. ரத்தம் அளித்த நபர் விசா நடைமுறைகளுக்காக மருத்துவப் பரிசோதனை செய்த போது அவருக்கு ஹெச்ஐவி தொற்று உள்ளதைக் கண்டு அதிர்ந்து உடனடியாக ரத்த வங்கிக்கு தகவல் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

pregnant women

உடனடியாக அந்தப் பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். பின்பு கடந்த ஜனவரி 17 – ஆம் தேதி அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. குழந்தையையும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில் குழந்தை பிறந்து 45 நாட்களுக்கு பிறகு செய்யப்பட்ட பரிசோதனையில் குழந்தை ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது.

blood bank

இதுபற்றி ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர் கூறுகையில், “குழந்தை வயிற்றில் இருக்கும் போதே நாங்கள் கொடுத்த மருந்துகளைத் தாய் தொடர்ந்து உட்கொண்டு வந்தார். இப்போது குழந்தை பிறந்த 45 நாட்களுக்கு பிறகு செய்த முதல் பரிசோதனையில் குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. அடுத்த பரிசோதனை 6 மாதம் கழித்து செய்யப்பட வேண்டும். அப்போதும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்றே நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.