தவறான வார்த்தைகளால் திட்டிய பெண் உதவி ஆய்வாளர்.. மனமுடைந்த மகளிர் குழு தலைவி விஷம் குடித்து தற்கொலை!

 

தவறான வார்த்தைகளால் திட்டிய பெண் உதவி ஆய்வாளர்.. மனமுடைந்த மகளிர் குழு தலைவி விஷம் குடித்து தற்கொலை!

குலசேகரபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் புஷ்ப லதா, மகளிர் சுய உதவிக் குழு அணித் தலைவியாக இருந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் புஷ்ப லதா, மகளிர் சுய உதவிக் குழு அணித் தலைவியாக இருந்தார். இவர் குழுவில் உள்ள பெண்களுக்குக் கடன் வாங்கி  கொடுத்து வந்துள்ளார். அதே போல, ஜெயராணி என்பவருக்கும் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் ஜெயராணி அதனை முறையாகச் செலுத்தவில்லையாம். புஷ்ப லதா கடனை திருப்பி செலுத்துமாறு ஜெயரணியை வற்புறுத்தியும் கேட்காததால், ஆத்திரமடைந்த அவர் வீட்டுக்கே சென்று ஜெயராணியை திட்டியுள்ளார். 

ttn

இதன் காரணமாக ஜெயராணி மீது சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் புஷ்ப லதாவை அழைத்து விசாரணை நடத்திய சுசீந்திரம் உதவி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா, அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த புஷ்ப லதா, நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து நிலையில் இன்று உயிரிழந்தார்.

ttn

இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புஷ்ப லதா மரணத்திற்குக் காரணமான உதவி ஆய்வாளர் அனிதா மீதும் ஜெயராணி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புஷ்ப லதாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.