தள்ளிப்போனது சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்! சோகத்தில் ரசிகர்கள்! 

 

தள்ளிப்போனது சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்! சோகத்தில் ரசிகர்கள்! 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி போன்ற திரைப்படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

sivakarthikeyan

காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் உழைப்பாளர் தினமான மே.1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து தள்ளிப்போய் மே.17ம் தேதி ரிலீசாகவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மணிரத்னத்துக்கு நோ சொன்ன விஜய் சேதுபதி…பொன்னியின் செல்வனில் இருந்து எஸ்கேப் ஆனது இதற்காகத்தான்…