தள்ளாத வயதிலும் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த அன்பழகன்

 

தள்ளாத வயதிலும் சக்கர நாற்காலியில்  வந்து வாக்களித்த அன்பழகன்

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், வீல் சேரில் வந்து வாக்களித்தார். 

சென்னை:  உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், வீல் சேரில் வந்து வாக்களித்தார். 

vote

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு 18-ம் தேதி (இன்று) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

vote

தமிழகம் மற்றும் புதுவையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவானது மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு தொடங்கியது முதல்  பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். 

anbalagan

இந்நிலையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தள்ளாத வயதிலும் தன் வாக்கைச் செலுத்த வந்தார்.  சக்கர நாற்காலியில்  மயிலாப்பூர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு,  வருகை தந்த அவர் தனது ஓட்டை பதிவு செய்தார். 

இதையும் வாசிக்க: மக்களவை தேர்தல் 2019 Live Updates; ஜனநாயக கடமையை நிறைவு செய்தார் மு.க.ஸ்டாலின்!