தளபதி 64 படத்தில் இணையும் கைதி வில்லன்! 

 

தளபதி 64 படத்தில் இணையும் கைதி வில்லன்! 

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

இந்நிலையில் தற்போது தளபதி 64 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கைதி படத்தில் வில்லனாக மிரட்டியிருந்த நடிகர் அர்ஜுன் தாஸ் தளபதி 64 படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் தாஸ் கைதி திரைப்படத்தில் தனது மிரட்டலான குரல் மூலம் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.