‘தளபதி 64′ படத்தில் இணைந்த ’96’ ஸ்டார்!

 

‘தளபதி 64′ படத்தில் இணைந்த ’96’ ஸ்டார்!

நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் .

தளபதி 64 படத்தில்   96 பட நடிகை  கௌரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளார். 

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை  மாநகரம் பட இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

vijay

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் விஜய் நடித்துள்ள பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.  இதையடுத்து  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறவுள்ளது.

gouri

இந்நிலையில் 96 படத்தில் குட்டித்ரிஷாவாக  நடித்த கௌரி கிருஷ்ணன் தளபதி 64 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டெல்லியில் 20 நாட்கள் நடைபெறும் இரண்டாம் கட்ட  படப்பிடிப்பில் கௌரி கிஷன் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.