தளபதி 64 அப்டேட்: நியூ இயரில் தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்!?

 

தளபதி 64 அப்டேட்: நியூ இயரில் தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும்  ட்ரீட்!?

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை  மாநகரம் பட இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.இவர்  சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இயக்குநர் ஆவார்.

thalapathy 64

த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் எடுக்கப்படும் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தளபதி 64 படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரும், டைட்டிலும் வரும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  தளபதி  ரசிகர்கள்  #NewYear2020 என்ற ஹேஷ்டாக்கை  வைரலாக்கி வருகின்றனர். இருப்பினும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.