தளபதி 63 பட அப்டேட் கொடுத்த பிரபலம்! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் 

 

தளபதி 63 பட அப்டேட் கொடுத்த பிரபலம்! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் 

தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி குறித்த அப்டேட்டை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார். 

சென்னை: தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி குறித்த அப்டேட்டை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார். 

அட்லீ- விஜய் காம்போவில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைந்து உருவாகிவரும் திரைப்படம் தளபதி 63. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்து வருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டு மையமாக கொண்டு உருவாகும் இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறர். 

மேலும் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுமாறு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது பாடலாசிரியர் விவேக் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி இன்னும் 30 நாட்களில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை மறைமுகமாக அந்த பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் அதில் தளபதி ரசிகர்கள் என்ற ஹாஸ் டாக் குறிப்பிடப்பட்டுள்ளதால் , விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகாதில் உள்ளனர்.