தளபதி 63 படத்தில் இணைந்த மற்றொரு நடிகை!

 

தளபதி 63 படத்தில் இணைந்த மற்றொரு நடிகை!

தளபதி 63 திரைப்படத்தில் ரெபா மோனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தளபதி 63 திரைப்படத்தில் ரெபா மோனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் வெற்றி படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 63 திரைப்படத்தை, ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

thalapathi 63

சென்னையில் பல இடங்களில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரெபா மோனிகா நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ஜெய் நடித்த ஜருகண்டி,சந்திரமவுலியின் டாவு திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

reba monica

மகளிர் கால்பந்து அணியில் விளையாடும் வீராங்கனைகளில் ஒருவராக ரெபா மோனிகா நடிக்கவுள்ளார். தற்போது தனது கதாபாத்திரத்திற்கான பயிற்சிகளில்  ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.