தளபதி 63 படத்தில் இணைந்த இளம் நடிகை!

 

தளபதி 63 படத்தில் இணைந்த இளம் நடிகை!

தளபதி 63 திரைப்படத்தில் நடிகை இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தளபதி 63 திரைப்படத்தில் நடிகை இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதையும் தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் நடிகர் என்றால் அது நடிகர் விஜய் தான். தெறி, மெர்சல் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். 

நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இதில் கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என்று ஒரு ரசிகர் பட்டாளமே நடித்து வருகிறது. கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இதில் விஜய் கால் பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார்.

indhuja

இந்நிலையில் இதில் மேயதா மான் புகழ் இந்துஜா தளபதி 63 படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் இந்துஜா விஜயின் கால் பந்து டீமில் உள்ளாரா அல்லது கதிருக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது பற்றிய தகவல் தெரிந்து கொள்ள நாம் காத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: மங்காத்தா 2 எடுக்க விடமாட்டேன்: நடிகர் பிரேம்ஜி ஓபன் டாக்!