தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை ‘இத்தனை கோடி’ கொடுத்து வாங்கியுள்ளதா சன்டிவி?! உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை ‘இத்தனை கோடி’ கொடுத்து வாங்கியுள்ளதா  சன்டிவி?! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி 63 படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

‘தளபதி 63’ படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர்  அட்லீ – விஜய் கூட்டணி தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து  மூன்றாவது முறையாக 
இணைந்துள்ளது. தளபதி 63 என்று அழைக்கப்படும் பெயரிடப்படாத  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தில்  ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா உள்ளிட்ட ஏராளமானானோர் நடிக்கின்றனர். 

vijay

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த இந்த  கதைக்களத்தில் நடிகர்  விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் கால்பந்து மைதானம் போன்ற  பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இருப்பினும் ஷூட்டிங்கில் உதவியாளர் ஒருவர் படுகாயம், கதை திருட்டு விவகாரம், தீ விபத்து என பல்வேறு காரணங்களால் ஷூட்டிங் தடைப்பட்டுப் போனது. மேலும் படத்தைக் குறித்த இந்த சர்ச்சைகளால் விஜய் ரசிகர்கள் களையிழந்து இருந்தனர். 

vijay

இதையடுத்து தளபதி 63 படத்தின் புகைப்படங்களும் இணையத்தில் லீக்கானது.,ஆதில்,விஜய வீல் சேரில்  உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தால்  தளபதி 63 படத்தின் கதை இது தான்,  அது தான் என்று அவரது ரசிகர்கள் விவாதிக்க தொடங்கினர்.  இருப்பினும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 

thalapathy

இந்நிலையில்  பொதுவாக விஜய் படங்களின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றப் பல நிறுவனங்கள் போட்டி போடும். அந்த வகையில் தளபதி 63 படத்திற்கு இதே போட்டி நிலவுகிறதாம்.  அதன்படி சன் டிவி நிறுவனமே தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை  ரூ.30 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்  ஆகிய மொழிகளும்  அடங்கும். இருப்பினும் இந்தி உரிமையைத் தயாரிப்பாளர் வசமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும்  வெளியாகவில்லை.  

atlee

ஒருவேளை இது உண்மையாகும் பட்சத்தில் சாட்டிலைட் உரிமம்  அதிக மதிப்பில் விற்கப்பட்ட  படம்  தளபதி 63 என்ற பெருமையை இப்படம் பெறும். இதனால் இதன் அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். முன்னதாக வெளியான மெர்சல் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ்,  ரூ.19 கோடிக்கும்,  சர்கார் படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், அதன் சாட்டிலைட் உரிமையை தன்னிடமே வைத்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.