தளபதி 63: பக்கா மாஸான முதல் பாடல்?

 

தளபதி 63: பக்கா மாஸான முதல் பாடல்?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் முதல் பாடல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் முதல் பாடல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘தளபதி 63’. இதில் கதிர், யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பின்னி மில்ஸ்ஸில் துவங்கியது. தற்போது இதன் முதல் பாடல் மற்றும் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் ஓப்பனிங் சாங் பக்கா மாஸாக உருவாகியிருக்கிறதாம், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.