‘தளபதி 63’ கதையாவது சொந்த கதையா?

 

‘தளபதி 63’ கதையாவது சொந்த கதையா?

தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ திரைப்படத்தின் கதை குறித்த விவாதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ திரைப்படத்தின் கதை குறித்த விவாதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து 3வது முறையாக அட்லி-விஜய் காம்போவில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகவுள்ளது. ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தை கதை தொடங்கி படத்தின் காட்சிகள் வரை பல அரசியல் சர்ச்சைகளில் சிக்கி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ திரைப்படமும் வலுவான அரசியல் பேசும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பழைய படங்களின் தழுவலில் படம் எடுப்பவர் அட்லி என்ற பலமான விமர்சனம் உள்ளது. ‘மௌன ராகம்’ சாயலில் ‘ராஜா ராணி’, ‘சத்ரியன்’ சாயலில் ‘தெறி’, ‘அபூர்வ சகோதரர்கள்’-’மூன்று முகம்’ சாயலில் ‘மெர்சல்’ என காப்பியடித்து படம் எடுப்பதாக அட்லியை கலாய்த்து வரும் நிலையில், ‘தளபதி 63’ படத்தின் கதையாவது சொந்த கதையாக இருக்குமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

atlee

இப்படம் சமீபத்தில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’, ‘ராட்சசன்’ படங்களை போல் த்ரில்லர் படமாக இருக்கும் என்றும், இப்படத்தில் விஜய் சிபிஐ அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.