தளபதி 63: ஆர்வத்துடன் ரசிகர்களை சந்தித்த விஜய் – வைரலாகும் வீடியோ
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘தளபதி 63’. இதன் படப்பிடிப்பில் விஜய் தன் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘தளபதி 63’. இதன் படப்பிடிப்பில் விஜய் தன் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இதன் சண்டை காட்சிகள் பின்னி மில்ஸில் படமாக்கப்பட்டு வருகிறது. அங்கே விஜயை சந்திக்க கூட்டமாக திரண்ட ரசிகர்களிடம் அவர் ஆர்வத்துடன் கை அசைத்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
Another Clear Video ??#ThalapathyVIJAY #Thalapathy63
~ @Vijay63_Movie #Vijay63Movie pic.twitter.com/BOjbX24Sdy— #Thalapathy63 (@Vijay63_Movie) January 26, 2019
இந்த வீடியோவை விஜய் ரசிர்கள் டிவிட்டர் தளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.