‘தளபதி 63’ அப்டேட்: விஜய்யுடன் இணையும் காமெடி பிரபலம்!

 

‘தளபதி 63’ அப்டேட்: விஜய்யுடன் இணையும் காமெடி பிரபலம்!

தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரபல காமெடி நடிகர் நடிக்கவுள்ளார்.

சென்னை: தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரபல காமெடி நடிகர் நடிக்கவுள்ளார்.

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து 3வது முறையாக அட்லி-விஜய் காம்போவில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகவுள்ளது. ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதுவரை இந்நிறுவனம் தயாரித்த திரைப்படங்களில் ’தளபதி 63’ திரைப்படம் தான் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான விஜய்-விவேக் காமெடி காம்போ மீண்டும் ‘தளபதி 63’ படத்தில் இணையவுள்ளது.

vijay

இதனை நடிகர் விவேக் சமீபத்தில் பங்கேற்ற விழா ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே, விஜய்- விவேக் கூட்டணியில் ‘நேருக்கு நேர்’, ‘குஷி’, ‘பிரியமானவளே’, ‘பத்ரி’, ‘ஷாஜஹான்’, ’தமிழன்’, ‘யூத்’, ‘திருமலை’, ‘உதயா’, ‘ஆதி’, ‘குருவி’, உள்ளிட்ட 11 திரைப்படங்களில் இவர்கள் அடித்த காமெடி சூப்பர் ஹிட்டான நிலையில், ‘தளபதி 63’ படத்திலும் வெற்றி பெறும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.