தளபதி 63 அப்டேட்: தீவிரமாக களமிறங்கிய இயக்குநர் அட்லீ: எதற்கு தெரியுமா?

 

தளபதி 63 அப்டேட்: தீவிரமாக களமிறங்கிய இயக்குநர் அட்லீ: எதற்கு தெரியுமா?

நடிகர் விஜய் 63வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் பணிக்காகத் தீவிரமாக இயக்குநர் அட்லீ களமிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தளபதி 63 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் பணிக்காகத் தீவிரமாக இயக்குநர் அட்லீ களமிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் என  இரண்டு படங்களும் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து நடிகர் விஜய்யின் 63-வது படத்தை இயக்குநர் அட்லீ இயக்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கான பூஜை போடப்பட்டு, தொழில் நுட்பக் கலைஞர்களும் அறிவிக்கப் பட்டிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். 

atlee

இந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரிக்கு விசிட் அடித்திருக்கிறார் அட்லீ. தளபதி 63 படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காகத் தான் அவர் சென்றார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு அவர் மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட படமும் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.