தளபதி விஜய் வீடு முன்பு ரசிகர்கள் செய்த செயல்! வைரலாகும் புகைப்படம் !

 

தளபதி விஜய் வீடு முன்பு ரசிகர்கள் செய்த செயல்! வைரலாகும் புகைப்படம் !

நடிகர் விஜய் வீட்டின் வெளியே அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் விஜய் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். ரசிகர்களால் அன்பாக தளபதி என்று அழைக்கப்படும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.  அவரின் படமொன்று வெளிவருகிறது என்றாலே அதை திருவிழாவை போல் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி மேளம், தாளம், வெடி, பாலாபிஷேகம் என்று அவரது ரசிகர்கள் பட்டையை கிளப்பி வருவார்கள். 

இந்த நிலையில் விஜயின் தீவிர ரசிகர்கள் இருவர், விஜய் வாழ்ந்து வரும், அவரின் வீட்டை கோவிலாக நினைத்து கை கூப்பி வணங்கியுள்ளனர். அப்போது  அதை புகைப்படமாக எடுத்து பதிவு செய்துள்ளனர். அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.