தளபதி விஜய்-க்கு மெழுகு சிலை…செல்பி எடுக்க அலைமோதும் கூட்டம்!

 

தளபதி விஜய்-க்கு மெழுகு சிலை…செல்பி எடுக்க அலைமோதும் கூட்டம்!

 இவரது ரசிகர்களும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விஜய்க்கு பெருமை செய்து வருகின்றனர். 

இளைய தளபதி விஜய் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். ஏராளமான படங்களின் மூலம்  மாஸ் மற்றும் கிளாஸாக வலம்  வரும் இவர் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.  இவரது ரசிகர்களும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விஜய்க்கு பெருமை சேர்த்து  வருகின்றனர். 

vijay

இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள மாயாபுரி மெழுகு அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  

 

vijay

விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள்  சார்பில் திறக்கப்பட்ட இந்த சிலையானது, பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு இந்த  அருங்காட்சியகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது என்றால் அது விஜய்க்கு தான். 

vijay

முன்னதாக இங்கு அமிதாப் பச்சன், அன்னை தெரசா, ஒபாமா உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. 

vijay

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் நிலையில், விஜய்யின்  மெழுகு சிலையைக் காணவும்  மக்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.