தளபதி பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்! வைரலாகும் வீடியோ!

 

தளபதி பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்! வைரலாகும் வீடியோ!

தளபதி விஜய்யின் பிரபல பாடல் ஒன்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: தளபதி விஜய்யின் பிரபல பாடல் ஒன்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2019 தொடரில் நேற்று(மே1) நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் போட்டியை ஆடி முடித்தது. 

bravo

இந்நிலையில், சிஎஸ்கே அணியினர் பங்கேற்ற புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், அணியின் வீரர் பிராவோ நடிகர் விஜய் நடித்த பிரபல பாடல் ஒன்றுக்கு நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். கடந்த 2008ம் ஆண்டு  விஜய்,நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் வில்லு. அப்படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடலான ‘வாடா மாப்பிள்ளை’ பாடலுக்கு நடனமாடியுள்ளார் பிராவோ. 

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகிறது.