தளபதி படத்தில் பார்த்தது போலவே இப்போதும் ரஜினி இருக்கிறார் – தர்பார் ஒளிப்பதிவாளர்

 

தளபதி படத்தில் பார்த்தது போலவே இப்போதும் ரஜினி இருக்கிறார் – தர்பார் ஒளிப்பதிவாளர்

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து  தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

darbar

இந்நிலையில் தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தளபதி படத்தில் பார்த்தது போலவே தற்போதும் ரஜினிகாந்த் உள்ளார் என கூறினார். சந்தோஷ் சிவன் தர்பார் மற்றும் தளபதி ஆகிய இரு படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது குறிப்பிடதக்கது. 

இதேபோல் தர்பார் வில்லனும், பாலிவுட் நடிகருமான சுனில் ஷெட்டி, ‘ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற திறமையானவர்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி ’ எனக் கூறினார்.