தல 60 படத்தில் அஜித்தின் ரோல் என்ன தெரியுமா? 

 

தல 60 படத்தில் அஜித்தின் ரோல் என்ன தெரியுமா? 

தல அஜித்தின் 60வது படத்தில் அவரின் ரோல் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: தல அஜித்தின் 60வது படத்தில் அவரின் ரோல் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கத்தில் வெளியான  இந்த படத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்துத் தெளிவாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

ஒரு பெண் நோ என்று சொன்னால் அதனின் அர்த்தம் நோ என்று அஜித் கூறிய வசனத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தல அஜித், வினோத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி பார்த்துத்திருந்தோம். 

தற்போது இந்த படத்தில் அஜித்தின் ரோல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம்… இதில் அஜித் கார் பந்தயவீரராக நடிக்கவுள்ளாராம். அதுவும் இரண்டாம் பாதி முழுவதும் கார் பந்தயத்தை மையமாக வைத்தே படத்தை வினோத் நகர்த்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த தகவலைக் கேட்ட தல ரசிகர்கள் அவரது கார் ரேஸ் காட்சிகளைக் காண ஆர்வமாக உள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும் இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.