‘தல 60’ இயக்குநர் இவரா?

 

‘தல 60’ இயக்குநர் இவரா?

தல அஜித் நடிக்கவுள்ள ‘தல 60’ திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தல அஜித் நடிக்கவுள்ள ‘தல 60’ திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ‘தல 59’ படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனிடையே, தல அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 60’ திரைப்படம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. தல அஜித்திற்கு வரலாற்று வெற்றியை கொடுத்த ‘பில்லா’ பட இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

thala60

இப்படத்தை ‘அறம்’ பட தயாரிப்பாளர் ராஜேஷ் கொட்டபாடியின் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது. தற்போது அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘தல 60’ திரைப்படம் பாலகுமாரன் எழுதிய ராஜேந்திர சோழன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.