தல 60வது படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இணைகிறாரா?

 

தல 60வது படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இணைகிறாரா?

தல 60 படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சென்னை: தல 60 படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் 8ம் தேதி வெளியாகவுள்ளது. 
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்தப்படம்  ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.  இதில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து தல 60வது படத்தையும் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளதாகச் சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். இந்த நிலையில் இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானஇசைமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் போனி கபூர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்துப் பேசியதாகவும், இதனால் ‘அஜித் 60’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் படக்குழு இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.