‘தல 59’: ஸ்ரீதேவி கணவருடன் தல அஜித் சந்திப்பு!

 

‘தல 59’: ஸ்ரீதேவி கணவருடன் தல அஜித் சந்திப்பு!

தல அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குநர் ஹெச். வினோத் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: தல அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குநர் ஹெச். வினோத் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவிருக்கும் இப்படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அஜித் நடித்த ‘வரலாறு’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘தல 59’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் தயாரிப்பாளர் போனி கபூரை நடிகர் அஜித் நேரில் சந்தித்துள்ளார். இவர்களது சந்திப்பில் இயக்குநர் ஹெச்.வினோத்தும் பங்கேற்றதாகவும் ‘தல 59’ படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் ‘தல 59’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாகவும், படத்தை தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் தல ரசிகர்களை உச்சக்கட்ட சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019ம் ஆண்டு தல பொங்கல், தல தீபாவளி தான் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.