‘தல 59’-ல் இணைந்த ‘விக்ரம் வேதா’ நடிகை!

 

‘தல 59’-ல் இணைந்த ‘விக்ரம் வேதா’ நடிகை!

தல அஜித் நடிக்கவுள்ள ‘தல 59’ திரைப்படத்தில் மூன்றாவது நடிகையாக ‘விக்ரம் வேதா’ நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார்.

சென்னை: தல அஜித் நடிக்கவுள்ளதல 59’ திரைப்படத்தில் மூன்றாவது நடிகையாகவிக்ரம் வேதாநடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 பெண்களும், தங்களது வழக்கறிஞரின் உதவியுடன் குற்றம்சாட்டப்படும் 3 ஆண்களுக்கும் எப்படி தண்டனை வாங்கித் தருகிறார்கள் என்பது தான் பிங்க் படத்தின் கதை. இதில் வழக்கறிஞராக அமிதாப் பச்சன் நடித்த கேரக்டரில் தல அஜித் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், அஜித்துடன் நடிக்கும் 3 பெண்களில் நஸ்ரியா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிக்கவுள்ள நிலையில், மூன்றாவதாக ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

shraddhasrinath

இப்படத்தில் வழக்கமான அஜித் படத்திற்கு இருக்கும் மாஸ் இல்லாவிட்டாலும், கதையே மாஸாக இருக்கும் என தல ரசிகர்கள் தங்களை சமாதனப்படுத்திக் கொண்டு ‘தல 59’ படத்தினை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர். இப்படம் தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே.1ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.