‘தல பொங்கலுக்கு’ தயாராகும் சீரியல் பிரபலங்கள்!

 

‘தல பொங்கலுக்கு’ தயாராகும் சீரியல் பிரபலங்கள்!

இந்த முறை தல பொங்கலை எந்தெந்த பிரபல ஜோடிகள் கொண்டாட உள்ளார்கள் என்பதை பார்ப்போம் வாங்க!

பொங்கல்  பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. பொதுவாக தீபாவளி என்றால் எந்தெந்த பிரபலங்கள் தலை தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலோடு இருப்போம். அதேபோல் இந்த முறை தல பொங்கலை எந்தெந்த பிரபல ஜோடிகள் கொண்டாட உள்ளார்கள் என்பதை பார்ப்போம் வாங்க!

அன்வர் – சமீரா  

ttn

’பகல் நிலவு’ சீரியல் ஜோடி  அன்வர் – சமீரா. சீரியலுக்கு முன்பாகவே இருவரும் காதலித்து வந்த நிலையில்  கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் முறைப்படி இந்த  ஜோடி திருமணம்  செய்து கொண்டது.

நித்யா ராம் – கெளதம்

ttn

சுந்தர்.சி இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடித்தவர் நடிகை  நித்யா ராம். 2015ம் ஆண்டு ‘முட்டு மனசே’ என்ற கன்னட படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு படவாய்ப்புகள் இல்லாததால், சீரியல் பக்கம் கரை ஒதுங்கினார். தற்போது லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து  வந்த இவர் ஆஸ்திரேலிய தொழிலதிபர் கௌதம் என்பவரை  கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

சஞ்சீவ் – ஆல்யா மானசா

ttn

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானஸா-சஞ்சீவ் ஜோடி. ரீல் ஜோடியாக எண்ட்ரி கொடுத்த இந்த ஜோடி நாளடைவில் காதலிப்பதாக அறிவித்தனர்.அதையொட்டி இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியில் நிச்சயதார்த்தம் கூடச் செய்து வைத்தனர்.இதையடுத்து இந்த ஜோடி கடந்த மே  மாதம் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டது.  தற்போது ஆல்யா கர்ப்பமாக உள்ளார்.

மைனா நந்தினி – யோகேஷ்

ttn

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் ’மைனா’ கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்தினி.அதுமட்டுமின்றி வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர், சமீபத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். நடிகை நந்தினி கடந்த ஒரு வருடமாக சத்யா, நாயகி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும்   யோகேஸ்வரனை காதலித்து வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் அவரை  கரம் பிடித்தார்.

ஸ்வேதா வெங்கட் – ஸ்ரீகந்தன்

ttn

பிரபல டிவியில்  தொகுப்பாளினியாக இருந்தவர் ஸ்வேதா. இதன் பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கிய இவர் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் இவர் தனது நீண்ட நாள்  காதலர்  ஸ்ரீகந்தனை கடந்த பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டார். 

ஆர்யன் – ஷப்னம்

ttn

ராஜா ராணி, தெய்வமகள் ஆகிய சீரியல்களில்   நடித்தவர் ஷப்னம். இவருக்கும் இவரது காதலர் ஆர்யனுக்கும் கடந்த  2017 செப்டம்பரில்  நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால்  சில காரணங்களால் திருமணம் தள்ளி போக, ஒருவழியாக  இந்த  ஜோடி  கடந்த செப்டம்பரில்  திருமண பந்தத்தில் இணைந்தனர்.

ஜெனிஃபர் – சரவணன்

ttn

செம்பருத்தி சீரியலில் உமா என்ற கேரக்டரில் நடித்தவர்  ஜெனிஃபர். இவர் தனது காதலன் சரவணனை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். பொறியியல் பட்டதாரியான சரவணன், சொந்த காரை வைத்து ஓட்டுநராக பணிசெய்து வருகிறார்.

என்.எஸ்.கே ரம்யா – சத்யா

tn

கலைவாணர் என்.எஸ்.கே.வின் பேத்தியும் என்.எஸ்.கே.ரம்யா, விஜய் டிவியில் ஒளிபரப்பான நீலக்குயில் சீரியலில் நடித்த சத்யா என்பவரை  இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.