தல தோனியின்  “தலை”க்கு பின்னால்!

 

தல தோனியின்  “தலை”க்கு பின்னால்!

கிரிக்கெட் களத்திற்கு வந்த  15 ஆண்டுகளில், கேப்டன் தோனியின் பல்வேறு சிகை அலங்காரத்தை பார்த்துள்ளனர் அவரது ரசிகர்கள். ஆனால், இந்த சிகை அலங்காரம் தோனிக்கு சற்று வித்தியாசமாகவே உள்ளது. அவரது நீளமான தலை முடி போலவே, இந்த MOHAWK வகை சிகை அலங்காரம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கிரிக்கெட் களத்திற்கு வந்த  15 ஆண்டுகளில், கேப்டன் தோனியின் பல்வேறு சிகை அலங்காரத்தை பார்த்துள்ளனர் அவரது ரசிகர்கள். ஆனால், இந்த சிகை அலங்காரம் தோனிக்கு சற்று வித்தியாசமாகவே உள்ளது. அவரது நீளமான தலை முடி போலவே, இந்த MOHAWK வகை சிகை அலங்காரம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

dhoni

தோனியின் இந்த MOHAWK வகை சிகை அலங்காரம், கால்பந்து ரசிகர்களுக்கு பழகிப்போன விஷயம் தான். டேவிட் பெக்காம், கிறிஸ்டியானோ ரொனால்டோ, பலட்டோலி, நெய்மர், STEPHEN EL SHAAWAWY என பல்வேறு கால்பந்து நட்சத்திரங்கள், ஏற்கனவே இந்த சிகை அலங்காரத்தில் தோற்றமளித்து விட்டார்கள். 

dhoni

தோனியின் இந்த புதிய தோற்றம், கால்பந்து மீது அவருக்கு உள்ள நேசத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரை இந்தியாவில் பிரபலப்படுத்துவதற்காக, தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள தோனி, அதுதொடர்பான விளம்பரங்களில் நடித்துள்ளார். 

dhoni

கிரிக்கெட் போட்டிகளைப் போல, மற்ற விளையாட்டுகளுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே தோனியின் விருப்பம். அந்த வகையில், கால்பந்து களத்தில் பிரபலமான MOHAWK வகை சிகை அலங்காரத்தில் தோற்றமளிப்பதன் மூலம், தனது இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துக்கான விளம்பர தூதர் பணியையும் சிறப்பாகவே செய்து வருகிறார் கேப்டன் தோனி.