தல ட்விட்டருக்கு வரணும்… பிக்பாஸ் யாஷிகாவின் கோரிக்கையை வச்சு செய்யும் ட்விட்டர்வாசிகள்?

 

தல ட்விட்டருக்கு வரணும்… பிக்பாஸ் யாஷிகாவின் கோரிக்கையை வச்சு செய்யும் ட்விட்டர்வாசிகள்?

அஜித் ட்விட்டரில் இணைய வேண்டும் என்று பிக்பாஸ் புகழ் யாஷிகா செய்த ட்வீட், மிகப்பெரிய விவாதமாக மாறி வருகிறது.

yaashika

நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமூக ஊடகங்களில் தனக்கு என எந்த ஒரு அக்கவுண்டையும் அவர் வைத்துக்கொண்டது. ஆனால், அஜித் பெயரில் அவ்வப்போது போலியான ஐடி-க்களில் இருந்து பதிவுகள் வருவதும் போவதுமாக உள்ளது. ரஜினி, விஜய், தனுஷ், அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் என்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எனத் திரை பிரபலங்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

twittter

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் யாஷிகா ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தல அஜித் ட்விட்டரில் இணைய வேண்டும் தீவிரமாக விரும்புகிறேன். என்னைப் போல வேறு யாராவது விரும்புகின்றீர்களா?” என்று ட்வீட் செய்திருந்தார்.

தல வந்தா செமயா இருக்கும் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வர… எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஒருவர் பேசிக் நோக்கியா போனில் எப்படி அஜிட் ட்விட்டர் பயன்படுத்த முடியும் என்று பதிவிட… இன்னொருவரோ விஷம் விஷம் என்று யாஷிகாவையே கிண்டல் செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவு அஜித் – விஜய் ரசிகர்களின் மோதல் களமாக மாறிவருகிறது. இதற்குத்தான் ஆசைப்பட்டிருப்பாரோ யாஷிகா?