“தல” என்ற பெயர் கொடுத்த தமிழ் ரசிகர்கள் பற்றி நெகிழ்ச்சியாக பேசிய தோனி!! 

 

“தல” என்ற பெயர் கொடுத்த தமிழ் ரசிகர்கள் பற்றி நெகிழ்ச்சியாக பேசிய தோனி!! 

ஐ.பி.எல் டி20 தொடரின் நேற்று நடந்த 50ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர் கொண்டது.

ஐ.பி.எல் டி20 தொடரின் நேற்று நடந்த 50ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர் கொண்டது. இதில் 80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

நேற்று களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் டோனி 22 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகள் என 44 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதுமட்டுமில்லாமல், மூன்று ஸ்டம்பிங்கும் செய்து டெல்லி அணியை திணர வைத்து விட்டர் டோனி. 

போட்டியின் போது டோனி ஏதாவது செய்தாலே தல தல என கோஷமிடுவது ரசிகர்களின் வழக்கம். நேற்று நடந்த போட்டிக்கு பின் பேசிய டோனி, தல-ன்னு இவ்வளவு பெரிய செல்லப் பெயர் கிடைத்தது உண்மையிலேயே ஸ்பெஷல் தான் என்றும், அப்போதெல்லாம் இந்த பெயர் இவ்வளவு ரீச் ஆகும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார். நான் இப்போது எங்கு சென்றாலும் என் ரசிகர்கள் என்னை தல தல என்று தான் அழைக்கின்றனர் இது ஒரு வித்தியாசமான உணர்வாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.