தல அஜித்துடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 

 

தல அஜித்துடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையும், நயன்தாராவின் கொலையுதிர் காலம் படமும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ளது.

சென்னை: தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையும், நயன்தாராவின் கொலையுதிர் காலம் படமும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகவுள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில், சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொலையுதிர் காலம். படம் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து தற்போது வரை இந்த படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், சென்ற மாதமே வெளியாக இருந்தது. ஆனால் தலைப்பின் காப்புரிமை பிரச்சனையால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பிறகு ஜுலை 26ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக போஸ்டருடன் படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதாம்…. இது ஒரு பக்கம் இருக்க ஆகஸ்ட் 8ஆம் தேதி, பலத்த எதிர்பார்ப்புடன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவிருப்பதால் அஜித்துடன் நயன்தாரா படம் மோதவுள்ளது.