‘தல’ அஜித்துடன் நடிப்பீங்களா? நடிகர் விஜய் சேதுபதியின் அதிரடி பதில்!

 

‘தல’ அஜித்துடன் நடிப்பீங்களா? நடிகர் விஜய் சேதுபதியின் அதிரடி பதில்!

நடிகர் ரஜினிகாந்த், சிம்பு , மாதவன் எனப் பலருடன் இணைந்து நடித்து வரும் விஜய் சேதுபதி நடிகர் அஜித்துடன் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், சிம்பு , மாதவன் எனப் பலருடன் இணைந்து நடித்து வரும் விஜய் சேதுபதி நடிகர் அஜித்துடன் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துள்ளார். பல முன்னணி நடிகர்களின் படத்திலும் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதி  தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்தில் ‘ஜித்து’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தவிர முன்னதாக மாதவனுடன் விக்ரம் வேதா, ஆர்யாவுடன் புறம்போக்கு, சிம்பு, அரவிந்த்சாமி உள்ளிட்டோருடன் செக்கச்சிவந்த வானம் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், தல கூட நடி தல என்று ரசிகர்கள் ஆரவாரக்குரலில் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ‘சான்ஸ் கொடுத்தா சந்தோஷம்’ என்று கூறியுள்ளார். அவரது இந்தப் பதிலுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து கைதட்டி மகிழ்ந்தனர்.இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.