தல அஜித்துடன் நடிக்க வேண்டும்: பிரபல நடிகை ஓபன் டாக் 

 

தல அஜித்துடன் நடிக்க வேண்டும்: பிரபல நடிகை ஓபன் டாக் 

நடிகை கீர்த்தி சுரேஷ் தல அஜித்துடன் சேர்ந்து படங்கள் நடிக்க காத்துருப்பதாக தெரிவித்துள்ளார்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தல அஜித்துடன் சேர்ந்து படங்கள் நடிக்க காத்துருப்பதாக தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நடிகையர் திலகம்’, ‘சாமி 2’, ’சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. அவரது நடிப்பில் வெளியான இந்த 4 திரைப்படங்களுமே விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேட்டி ஒன்று அளித்துத்திருந்தார், அதில் “படிக்கும் போதே நடிகையாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு ஏற்படவில்லை . மாடலிங் செய்து வந்தேன்,அப்போது கடவுளின் அணுகிரகம் இருந்ததால் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து . இப்போது நடிகையாகி விட்டேன். கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். 

keerthi suresh

மலையாளத்தில் நான் முதலில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழ் சினிமாவில் நடித்ததால் தான் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. தமிழ் சினிமாவில் புதுப்புது இயக்குனர்கள் அறிமுகமாகி பல்வேறு வித்தியாசமான படங்களை இயக்குகிறார்கள். படங்களை பார்க்க வரும் ரசிகர்களும் நல்ல தெளிவாகவே உள்ளனர். என்னால் முடிந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறேன். இதற்காக கடுமையாக உழைக்கிறேன். எனக்கு திருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லை.

இன்னும் நான் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். நடிகர் விஜய் கூட நடித்துவிட்டேன். தல அஜித்கூட நடிக்க வேண்டும் என்றால் அது நடக்கும். அந்த வாய்ப்பு என்னை தேடி வரும் வரை காத்திருப்பேன்” என்று பேசியுள்ளார்.