தல அஜித்துடன் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா!

 

தல அஜித்துடன் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா!

தல அஜித் நடிக்கும் ‘தல 59’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை நஸ்ரியா நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: தல அஜித் நடிக்கும் ‘தல 59’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை நஸ்ரியா நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் ‘நேரம்’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் எனும் நிக்கா’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. மலையாளத்தில் இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கிய ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.

தற்போது ஃபகத் ஃபாசில் நடித்த ‘கூடே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ள நஸ்ரியா, தமிழிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 பெண்களும், தங்களது வழக்கறிஞரின் உதவியுடன் 3 ஆண்களுக்கு தண்டனை வாங்கித் தருகிறார்கள் என்பது தான் பிங்க் திரைப்படத்தின் கதை. இதில் வழக்கறிஞராக அமிதாப் பச்சன் நடித்த கேரக்டரில் தல அஜித் நடிக்கவுள்ளார். இதில் 3 பெண்களில் ஒருவராக நஸ்ரியா நடிக்கவிருப்பதாகவும், 3 ஆண்களில் ஒருவராக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.