தல அஜித்துக்கு ஜோடியாகும் வித்யா பாலன்?

 

தல அஜித்துக்கு ஜோடியாகும் வித்யா பாலன்?

தல அஜித் நடிக்கவிருக்கும் ‘பிங்க்’ பட ரீமேக்கில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை: தல அஜித் நடிக்கவிருக்கும் ‘பிங்க்’ பட ரீமேக்கில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். இது ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

pink

இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதாகவும், நாயகியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக எவ்வித சம்பளமும் வாங்காமல் இலவசமாக வித்யா பாலன் நடித்துக் கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

vidyabalan

தெலுங்கில் என்.டி.ஆர் பயோபிக் படத்தில் நடித்து வரும் வித்யா பாலன் விரைவில் ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் மூலம் தமிழ் திரையுலகிலும் நடிப்பார் என கூறப்படுகிறது. யுவன் இசையமைக்கவுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.