தல அஜித்தின் விஸ்வாசம்: வியந்து பாராட்டிய காவல்துறை உயர் அதிகாரி

 

தல அஜித்தின் விஸ்வாசம்: வியந்து பாராட்டிய காவல்துறை உயர் அதிகாரி

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படத்தை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் வெகுவாக பாராட்டியுள்ளார்

சென்னை: தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படத்தை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

தல அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10-ம் தேதியன்று ரிலீசானது. குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஸ்வாசம் திரைப்படத்தை காவல்துறை துணை ஆணையர் சரவணன் வெகுவாக பாராட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது. கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா. விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்” இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை உயர் அதிகாரியான இவரது ஃபேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.