தல அஜித்தின் விஸ்வாசத்துக்கு ‘யு’ சான்றிதழ்!

 

தல அஜித்தின் விஸ்வாசத்துக்கு ‘யு’ சான்றிதழ்!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா-தல அஜித் கூட்டணியில் 4வதாக உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மதுரை பின்னணியில் இப்படத்தின் கதை உருவாகியுள்ள இப்படத்தில் தல அஜித் இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம்.

பொங்கல் ரிலீசுக்கு தயாராகவுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. குடும்ப படமான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி.இமான் இசையில் இப்படத்தின் மெரும்பாலான பாடல்கள் பட்டையை கிளப்பிய நிலையில், இப்படத்தின் டீசர் வரும் வியாழக்கிழமையோ அல்லது புத்தாண்டு பண்டிகைக்கோ வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.