தல அஜித்தின் நேர்கொண்ட ‘பார்வை’க்கு தப்பிய புது போட்டோ!

 

தல அஜித்தின் நேர்கொண்ட ‘பார்வை’க்கு தப்பிய புது போட்டோ!

தல அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை: தல அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

தல அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில்,போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ஆண்ட்ரியா, அபிராமி வெங்கடாச்சலம்,  தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. 

nerkonda parvai

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் நாயகிகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ஆண்ட்ரியா தாரியங், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் முதன் முறையாக வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட்.10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையும் படிங்க: கை தட்டுறதை நிறுத்துங்க! கமல் மாதிரியே மையமா கருத்து சொன்ன ஸ்ரீ ப்ரியா!?