‘தல’ அஜித்தின் காலண்டரை வெளியிட்ட பிக் பாஸ் மதுமிதா

 

‘தல’ அஜித்தின் காலண்டரை வெளியிட்ட பிக் பாஸ் மதுமிதா

மதுமிதா  கமல்  உள்பட பலரையும் வறுத்தெடுத்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா. 

பிக் பாஸ் மதுமிதாவை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. காரணம் தமிழ் பெண்கள், கலாசாரம் என்று சொல்லி சகா போட்டியாளர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட அவர் ஒருகட்டத்தில் தனது வாதத்தை நிரூபிக்க பிக் பாஸ் வீட்டுக்குள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ttn

 பின்பு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மதுமிதா  கமல்  உள்பட பலரையும் வறுத்தெடுத்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா. 

 

இந்நிலையில் மதுமிதா தனது கணவருடன் இணைந்து  அஜித் ரசிகர்களின் விருப்பப்படி, தல அஜித்தின் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதற்கான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள அவர், #RaceKingAjithNarpaniIyakkam ஹேஷ்டாக்கை  பதிவிட்டுள்ளார்.  மதுமிதா அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். 

முன்னதாக நடிகர் அஜித் வலிமை படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.