தல அஜித்திடம் வாய்ப்பு கேட்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்: எதற்கு தெரியுமா? வைரல் வீடியோ!

 

தல அஜித்திடம் வாய்ப்பு கேட்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்: எதற்கு தெரியுமா? வைரல் வீடியோ!

நடிகர் அஜித்தை குறித்து  பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

புதுக்கோட்டை: நடிகர் அஜித்தை குறித்து  பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, இவர்களுடன் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். 

 

இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ,’நான் புதுக்கோட்டையில் தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறேன். எனது பெயர் சரோஜா. நான் அஜித்தின் ஆரம்ப பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு கேட்டு புதுக்கோட்டையிலிருந்து ஆட்டோவில் சென்னைக்கு பயணிக்கிறேன். அஜித்தைப் பற்றி 2 பாடல்களும், கவிதைப் புத்தகம் ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறேன். அதை அஜித்திடம் கொடுக்க வேண்டும். அஜித்தின் படத்தில் எனது பாடல் இடம்பெற்றால் அதை நான் செய்த பாக்கியமாக நினைக்கிறேன். அஜித்தின் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.பெண் ஆட்டோ ஓட்டுநர் சரோஜா வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.