‘தலை தீபாவளி’யை உற்சாகமாக கொண்டாடிய பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் ஜோடி!

 

‘தலை தீபாவளி’யை உற்சாகமாக கொண்டாடிய பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ்  ஜோடி!

கணவர் ஜோனாஸுடன் வெளிநாடுகளுக்கும் அடிக்கடி ட்ரிப்  அடிப்பது மட்டுமல்லாமல், அதற்கான புகைப்படங்களையும்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ்  தம்பதியினர் தலை தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். 

priyanka

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது குறைந்த காதலரான பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரம் பிடித்தார். ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ‘உமைத் பவன்’ அரண்மனையில் இந்து முறைப்படியும், கத்தோலிக்க கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் சில முக்கிய பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

priyanka

திருமணம் முடிந்த கையோடு திரைப்படங்களில் நடிப்பதில் முனைப்புக் காட்டி வந்த  பிரியங்கா விடுமுறை நாட்களில்  கணவர் ஜோனாஸுடன் வெளிநாடுகளுக்கும் அடிக்கடி ட்ரிப்  அடிப்பது மட்டுமல்லாமல், அதற்கான புகைப்படங்களையும்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த இளம் ஜோடி தல தீபாவளியை மெக்சிகோவில் கொண்டாடியுள்ளது. இந்த கொண்டாட்ட புகைப்படங்களைப் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். நாங்கள் காபோவில் தீபாவளி கொண்டாடுகிறோம். அமைதியும் செழிப்பும் பெருகட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா தங்க நிறத்திலான சேலையும், வெள்ளை சட்டையில் நிக் உள்ளார். இந்த புகைப்படங்களுக்கு இவர்களது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.