‘தலைவி’ படத்தில் அண்ணா துரை கேரக்டரில் நடிக்கும் பிரபல இயக்குநர்: வைரல் புகைப்படங்கள்!

 

‘தலைவி’ படத்தில் அண்ணா துரை கேரக்டரில் நடிக்கும் பிரபல இயக்குநர்: வைரல் புகைப்படங்கள்!

முதல்வருமான அண்ணாதுரை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றை பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வந்த நிலையில்  இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார்.  தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். மேலும் நடிகை பூர்ணா, மதுபாலா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின்  ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர்  ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

 

சமீபத்தில் தலைவி படத்தின் கங்கனா ஃபஸ்ட்   மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள், அதேபோல் எம்ஜிஆராக மாறிய அரவிந்த் சாமி புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. 


இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான பாரதி கண்ணன் தலைவி படத்தில் திராவிடக்கட்சித் தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

ttn

முன்னதாக பாரதி கண்ணன்  நாசர் நடித்த அருவா வேலு, கண்ணாத்தாள், திருநெல்வேலி உள்ளிட்ட பல படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.