‘தலைவர் 168’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பிரபல பேட்மிண்டன் வீராங்கனை!

 

‘தலைவர் 168’  ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பிரபல பேட்மிண்டன் வீராங்கனை!

ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.

தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.  

ttn

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கை வேடத்தில் நடிக்கிறாராம்.  தற்போது தலைவர் 168 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

ttn

இந்நிலையில் ரஜினியை பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “Moment of Wow” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.