தலைவர் ஸ்கீரினில் வரும் காட்சிகள் வெறித்தனமாக உள்ளது: பிரபல இயக்குநர் ட்வீட்!

 

தலைவர் ஸ்கீரினில் வரும் காட்சிகள் வெறித்தனமாக உள்ளது: பிரபல இயக்குநர் ட்வீட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் வெறித்தனமாக இருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் வெறித்தனமாக இருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். 

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர்  ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0.  3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

karthik subburaj

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

 

இதை தொடர்ந்து 2.0 படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘2.0 வெறித்தனமாக இருக்கிறது. தலைவர் ஸ்கீரினில் வரும் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன. இந்திய சினிமாவின் தரத்தை இந்த படம் உயர்த்தி உள்ளது. அனைவரும் கொண்டாட வேண்டிய படம்’ என்று பதிவிட்டுள்ளார். திரைத்துறை சார்ந்த  பலரும் படத்தை பார்த்து  பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.