தலைவர் பதவி ஏலம் விடப்படுவது ஆண்டாண்டு காலமாக நடக்கிறது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

தலைவர் பதவி ஏலம் விடப்படுவது ஆண்டாண்டு காலமாக நடக்கிறது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஜனநாயகம் முறையில் தலைவரைத் தேர்ந்தெடுக்காமல் ஏலத்தின் மூலம் அந்த ஊர்மக்கள், ஊர் தலைவரைத் தேர்ந்தெடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமத்தில், நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் யார் போட்டியிடுவது என்று குழப்பம் ஏற்பட்டது. அதனால், அப்பகுதி மக்கள் ஊர்த்தலைவர் பதவியை ஏலம் விட முடிவு செய்தனர். அதில், 50 லட்சத்துக்கு ஊர்த் தலைவர் பதவியை அதிமுக கட்சி உறுப்பினர் சக்திவேல் என்பவர் ஏலம் எடுத்தார். 15 லட்சத்துக்குத் துணைத் தலைவர் பதவியை  தேமுதிகவைச் சேர்ந்த முருகன் என்பவர் ஏலம் எடுத்தார்.

ttn

ஜனநாயகம் முறையில் தலைவரைத் தேர்ந்தெடுக்காமல் ஏலத்தின் மூலம் அந்த ஊர்மக்கள், ஊர் தலைவரைத் தேர்ந்தெடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பகுதிகளில் இது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. 

ttn

இது குறித்து இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைவர் பதவிகளை ஊர்மக்கள் ஏலம் விடுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் போவது ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுத் தான் வருகிறது. அதனைத் தடுக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுத்த வண்ணமே உள்ளது என்று தெரிவித்தார். மேலும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகத் தான் குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது என்றும் கூறினார்.