தலைவரே நம்ம ஆட்சியில் நடந்ததெல்லாம் மறந்து போச்சா..? பகீர் சம்பவங்களை அடுக்கி ஸ்டாலிக்கு அதிர்ச்சி..!

 

தலைவரே நம்ம ஆட்சியில் நடந்ததெல்லாம் மறந்து போச்சா..? பகீர் சம்பவங்களை அடுக்கி ஸ்டாலிக்கு அதிர்ச்சி..!

தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை தீயிட்டு கொழுத்தி மூன்று அப்பாவி ஊழியர்களை கொலை செய்தது எல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள்.

நாட்டின் ஒற்றுமையை களங்கப்படுத்தும் விதமாக, பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக, செயல்பட்டதால் திரைப்பட இயக்குனர்கள் மணிரத்னம், அபர்னா சென், சவுமிதா சாட்டர்ஜி, ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப் உட்பட 49பேர் மீது நீதிமன்ற உத்தரவின்படி தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

stalin

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட, 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், ஜனநாயகத்தின் முன்பு படுதோல்வி அடைந்தது தான் இதுவரை வரலாறு என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துக்கு பல தரப்பில் இருந்து பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளனர். ஜனநாயகத்தின் வரலாறு பற்றி பேசும் ஸ்டாலின், திமுக ஆட்சியில் நடந்த ஜனநாயக படுகொலையும், சர்வதிகாரமும் அரங்கேறிய வரலாற்றை மறந்து விட்டாரா? என ஆளும் கட்சியினர் தொடங்கி சாமானியன் வரை கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.

Stalin

2011 ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடியதால் சுமார் 7,000 பேர் மீது ‘தேசத்துரோக’ வழக்கு போட்டது திமுக ஆட்சி தானே? என பதிலடி கொடுத்துள்ளார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன், ஷியாம். அதனாலோ என்னவோ இன்றுவரை ஆட்சிக்கு வரமுடியாமல் தவித்துகொண்டு இருக்கறீர்கள்! என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொது செயலாளர் வைகோ மீது தேசதுரோக வழக்கு பதியபட்டு சில மாதங்களுக்கு முன் அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வைகோவை “தேசத்துரோகி” என தீர்ப்பு வழங்கியது. மேலும் 2009 ஆம் ஆண்டு இலங்கயில் போர் நடந்து கொண்டிருந்த போது விடுதலைப்புலிக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், இயக்குனர் அமீர் உட்பட்டவர்களை சிறையில் அடைத்தது திமுக ஆட்சி என்பதை ஸ்டாலின் மறந்து விட்டாரா என் ஈழ தமிழ் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

stalin

இன்று ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கும் ஸ்டாலின், 2007 ஆம் ஆண்டு கருனாநிதி குடும்பத்தில் நடந்த பதவி போட்டியின் காரணமாக, மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தை தீயிட்டு கொழுத்தி மூன்று அப்பாவி ஊழியர்களை கொலை செய்தது எல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள்.