தலைவருக்கு வாழ்த்துக்கள்… ஸ்டாலின் பேனரால் ஏற்பட்ட பரபரப்பு!

 

தலைவருக்கு வாழ்த்துக்கள்… ஸ்டாலின் பேனரால் ஏற்பட்ட பரபரப்பு!

சென்னை பள்ளிக்கரணயில் சாலையின் நடுவே வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் டூ விலரில் சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணயில் சாலையின் நடுவே வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் டூ விலரில் சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிவஸ்ரீயின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தினாலும், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலினாலும் அரசியல் கட்சிகள் தலைவர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு, இப்போது தான் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்ததைப் போல அவர்களின் தொண்டர்களுக்கு, இனி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டார்கள்.

stalin banner

அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், நூறு அடிகள், இருநூறு அடிகள் என்று ஒவ்வொரு படங்களின் ரிலீஸ் சமயத்திலும் படத்தின் கதையை நம்பாமல் பேனர் வைத்து சாதனை செய்ய நினைக்கும் விஜய், சூர்யா போன்ற நடிகர்களும் கூட தங்களது ரசிகர்களுக்கு, இனி பேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள். 
இந்நிலையில், என்றுமே நாங்கள் திருந்தவே மாட்டோம் என்று சொல்லும் விதமாக சேலம் திமுகவினர் இன்று புதிதாய் ஒரு பேனர் வைத்து போக்குவரத்து போலீசாருக்கு சவால் விடும் வகையில் செய்திருக்கிறார்கள்.
அந்த பேனரில், ‘பேனர் வைக்க வேண்டாம் என கூறிய தளபதிக்கு வாழ்த்துக்கள்..!’ என்கிற வாசகங்கள் இருக்க கலைஞரும், ஸ்டாலினும் புகைப்படங்களில் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடவடிக்கை எடுக்க வேண்டிய காவலர்களோ, மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகளோ பேனரைப் பார்த்து செய்வதறியாது தலையில் அடித்துக் கொண்டு கடந்து செல்கிறார்கள். பேனரைக் கடந்துச் செல்லும் பொதுமக்கள், ஒரு நிமிடம் பேனரின் கீழ் நின்று, வாசகங்களைப் படித்துப் பார்த்து, ‘இவர்கள் என்றைக்குமே திருந்த மாட்டார்கள்’ என்றபடியே செல்கிறார்கள்!